இருபத்தியோராம் நூற்றாண்டின் அழகி.!
தஞ்சாவூர் ஜங்ஷனிலிருந்து மஞ்சத்திடல் செல்ல வேண்டும். அடிக்கடி செல்வது வழக்கம். வேலையொன்றுமில்லை பெரியப்பா வீடு அங்கு. எக்ஸ்பிரஸ் நிக்காது. பெரும்பாலும் நான் பேசஞ்சரில் செல்வதே வழக்கம். நடைபாதை வியாபாரிகளுக்கு டிக்கட்டே தேவையில்லை. அடுத்தடுத்த ஸ்டாப்பில் ஏறி இறங்கி வியாபாரம் செய்வார்கள். கீரை விற்கும் ஆயா ஏறி இறங்கும்போதெல்லாம் டல்ஹௌசிக்கு நன்றியை சொல்வேன். படியிலமர்ந்து, படியில் நின்று, படியில் தொங்கி வரும் எவரையும் நான் கண்டு கொள்வதில்லை. இன்று விபத்தென்றால் அன்றாடம் பயணிக்கும் எல்லோர்க்கும் தெரிந்திருக்கும். இருந்தும் மறுநாள் தொங்கும் அறிவற்றவர்களை நினைத்து கவலைப்படப் போவதில்லை. ரசனையற்ற மனிதர் என நினைக்கலாம். உண்மைதான் ‘மரணத்தை எனக்கு ரசிக்கத் தெரியாது’. பெட்டி காலியாக இருந்தாலும் தினம் நின்றே வந்த பழக்கத்தில் உட்கார மறந்தவரை பார்த்து சிரித்திருக்கிறேன். நான்காவது பெட்டியில் எடுத்த பிச்சையை ஒன்பதாவது பெட்டியில் வெறுங்கை நீட்டி நிற்கும் சிறுவனுக்கு பாதியை கொடுத்து நகர்ந்த முதியவரை ரசித்திருக்கிறேன். "...