இடுகைகள்

2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாட்டு

படம்
"நம்ம திட்டமிடாத ஒரு பொழுதில் நம் வாழ்க்கைக்குள்ள ஒரு பாடல் வருது அதனாலதான் அது ஸ்பெஷலா இருக்கு". கவிஞர் வெய்யில் கலந்துகொண்ட இந்த  நிகழ்ச்சியை  அப்போதே பார்த்துவிட்டேன். அதே நிகழ்ச்சியில் 'நாதம் என் ஜீவனே' பாடலை ஒரு பெண் பாடியிருப்பார். அதையும் இந்தக் காணொளியையும் அடிக்கடி பார்ப்பேன். குறிப்பாக வெய்யிலின் குரல் அவர் கவிதையைப் போன்றே எனக்குப் பிடித்திருந்தது ஒரு காரணம். சமீபத்தில் கூட அவரின் முகநூல் பக்கத்தில் 'ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது' பாடலை பதிந்திருந்தார். அதை எனது நண்பருக்கு அனுப்பியிருந்தேன். "வாவ்...வெய்யில் கவிதைகள் ரொம்ப பிடிக்கும் அவர் பாடுவார்னு இப்பதான் தெரியும்"னு அனுப்பியிருந்தார்.  இந்தப் பதிவு வெய்யிலுக்கானதல்ல., வெய்யிலாலானது. இப்பல்லாம் பேசுறதுக்கும் எழுதுறதுக்குமே ஒரு தயக்கம் இருக்கு...'பூமர் அங்க்கிள்'னு கமெண்ட் பண்ணிடுவாங்களோன்னு... மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது எங்கோ ஒலிக்கிற பாடல் காற்றில் மிதந்து காதில் கேட்கும் என சொல்லியிருப்பார் வெய்யில். அந்த உண்மைக்காகத்தான் இதை எழுதணும்னு நினைக்கிறேன். முதல் டி.வி...

பத்தாயம்

படம்
த ஞ்சாவூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக ஹரித்துவாரமங்கலம் சென்று, அங்கிருந்து மாற்றுப் பேருந்து ஏறினால் 'மருவத்தூர்' எனும் குக்கிராமம். அங்குதான் வேலை. பன்னெடுங்கால சிவன் கோயிலை மீட்டுக் கட்டியெழுப்ப வேண்டும். தாய் மாமனுக்கு முதல் காண்ட்ராக்ட் வேலை. பனிரெண்டாம் வகுப்பு முடித்த கோடை விடுமுறை என்பதால் நானும் வேலைக்குச் சென்றிருந்தேன். அர்த்த மண்டபம், மஹா மண்டபம், கர்ப்பக் கிரகம் என இருந்த பழைய பாழடைந்த கருங்கற் கோயிலை அப்படியே பிரித்து அப்படியே கோர்க்க வேண்டும். விறுவிறுப்பாக வேலைகள் நடக்கும். ஆளாளுக்கு பாடல்கள் போட வாய்ப்புண்டு. நான் அப்போது சாம்சங் பட்டன் போன் வைத்திருந்தேன். ஒரு ஜி.பி. மெமரி கார்டு முழுக்க மதுரை சந்திரன் பாடல்கள்தான். 'உன்னை பெத்த தோசத்துக்கு ஒரு மண்ணை பெத்தாலும் வாழ்ந்திருப்பேன். கண்ணை வித்து சித்திரம் வாங்கிய கதையா போச்சு... எலே கடன்காரனே தொலஞ்சி போன்னு கட்சி மாறியாச்சு, பெத்தவளும் கட்சி மாறியாச்சு' 'இலங்கையைக் குரங்கு எரித்தது அன்று. இலக்கியம் கூறும் சரித்திரம் உண்டு.' 'நாத்துனா மகனுக்கு என் பொண்ணக் கொடுத்து...' 'மாடு ம...

தெவசம் - 5

படம்
" சூ டா... சூடா... விடிஞ்சிருச்சு பாரு எழுந்திரு..."  பாயில் கிடந்தவன் எப்போது சூடாவின் மடியில் படுத்தான் என்று தெரியவில்லை. தங்கமணியைத் தூக்கி தனியே படுக்க வைத்துவிட்டு சூடாமணியை எழுப்பிவிட்டாள் சிவப்பாக்கியம். "அந்த நாலு நண்டயும் புட்டுப் போட்டு இந்தப் பயலுக்கு ஒரு ரசம் வச்சி குடு. நத்த ஊருது, அதை கொதிக்க வச்சி நோண்டி பெரட்டி குடு. நாட்டுமகாரவங்கள பாத்து சேசனுக்கு போறத பத்தி சொல்லிட்டு வரேன்..." எனக் கிளம்பினாள். ஏ.வி.டி. டீ தூள் பையை வெற்றிலைப் பொட்டலமாக மாற்றியிருந்தார் சிங்காரு. வெற்றிலையை எடுத்து சுண்ணாம்பு தடவிக் கொண்டிருந்தவரிடம், "சேசனுக்கு போயிட்டு வருவோம். ஒங்கூட இன்னும் ரெண்டு நாட்டுமகாரவங்கள அழச்சிக்க" என்று அவரது வெற்றிலைப் பொட்டலத்திலிருந்து சீவலை எடுத்து உள்ளங்கையில் வைத்து நிமிட்டினாள் சிவப்பாக்கியம். "பெரிய நாட்டான்ட்ட ஒரு வார்த்த சொல்லிடு. செகநாதன்ட்ட நான் சொல்லிட்றேன்." எனச் சுண்ணாம்பு குவளையை சிவப்பாக்கியத்திடம் தந்தவர், "காசி கீசி வச்சிருக்கியே... அங்க போனா ஆளுவோளுக்கு டீ கீ வாங்கி தரணும்." என்றார். ...

தெவசம் - 4

படம்
இ லுப்பை மரங்களிலிருந்து வெளவால்களின் சத்தம். செங்கல் கால்வாய் வேலை முடித்து இரவு உணவுக்கு அடுப்பேற்றியிருந்தனர் பணியாட்கள். கோழிகளை கூட்டுக்குள் அடைத்தும் சேவல்களைக் கூடையிலும் கவிழ்த்துக் கொண்டிருந்தார் வடவாத்தங்கரையாரின் அம்மா செல்லபாங்கி. பங்காளி வீடும் இவர் வீடும் இணைந்து சுத்துக்கட்டு வீடாய் இருந்தது. கருப்பஞ் சோகையால் வேயப்பட்ட உயரமான திண்ணையுள்ள வீடு. மண் சுவற்றில் ஆங்காங்கு அடுக்குத் தேனிகளின் கூடு. முன்பக்க மாடத்தில் நல்ல விளக்கு எரிந்துகொண்டிருந்தது. வீட்டுக்குள் விசும்பிக் கொண்டிருந்தாள் வடவாத்தங்கரையாரின் மனைவி வசந்தா. "வாய வச்சிக்கிட்டு சும்மா இல்லாம ஒன்னு கெடக்க ஒன்னு சொல்லப் போயி, அழச்சிட்டு பூட்டாங்க... நான் ஆர போயி புடிப்பேன். எப்படி கொண்டாருவேன்." என்றவள், பிள்ளைகளை மடியில் கிடத்தி தூங்க வைத்துக் கொண்டிருந்தாள். "சோத்துல தண்ணி வூத்துட்டா... திங்கிறீங்களா" எனக் கோழிகளைக் கவிழ்த்துவிட்டு வந்து கணவரைப் பார்த்துக் கேட்டார் செல்லபாங்கி. "இவுனுவோ பாட்டுக்கு செவனேன்னு ஆக்கி எறக்குனத தின்னுக்கிட்டு பொழப்ப பாக்க வேண்டிதான. எதுக்கு இந்த வம்...

தெவசம் - 3

படம்
ஆ ற்றங்கரைக்கு மேல் வடக்கே தொரப்பு - வேலப்பூண்டிக்குச் செல்லும் சாலையும் தெற்கே பல்வாய்கண்டம் - கஞ்சங்கொல்லை செல்லும் சாலையும் வெறிச்சோடியிருந்தது. கிளுவை மரத்தடியில் அரிவாள் துணையில்லாமல் முறைத்து நின்றார் கரும்பாயிரம். மகனைக் கையில் பிடித்துக்கொண்டு கரும்பாயிரம் கோயிலை நோக்கி நடந்தார் வடவாத்தங்கரை ஆள். தோளில் கிடந்த துண்டையெடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு,  "ஐயா சாமி... தாய பழிச்சதில்ல தண்ணிய பழிச்சதில்ல. யாரு வம்பு தும்புக்கும் போனதில்ல... எத்தினி நாளக்கிதான் ஒதப்பட்டு கெடக்குறது. இந்த தடவ வுட்டா மின்ன ஆன மேறி இப்பயும் வூடு வாச இல்லாம நிக்கணும். ராத்திரி தெருவுக்குள்ள பூர்றதுக்கு திட்டம் போட்ருக்கானுவோ மேலத்தெருவானுவோ... ஒருத்தனையாச்சும் புடிச்சி வெட்டுனாதான் கொஞ்சமாச்சும் பயமிருக்கும்னு... என் தம்பிக்காரன் சொன்னான்னுதான் உன் பொருளுல கைய வச்சேன். வெட்டுன பயலுவோ ஓடி ஒளியிற வேகத்துல ஆத்துல போட்டுட்டு பூட்டானுவோன்னு என் பொண்டாட்டிக்காரி சொல்லிதான் தேட வந்தேன். உன் புண்ணியத்துல அது எங் கையில கெடச்சிருந்தா... படி அளக்குற எஞ்சாமின்னு நெடுஞ்சாங்கடையா வுழுந்து ஒப்படச்சிருப்ப...

தலைக் கவிழ்ந்த சிங்கம்

படம்
  அந்தக் காட்டில் நரியும் பன்றியும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். யார் புத்திசாலி என்பதிலும் யார் பெரியவர் என்பதிலும் அடிக்கடி சண்டை வரும். இதைக் கவனித்துக் கொண்டிருந்த சிங்கத்திற்குக் கடுமையான கோபம். “நான்தான் இங்கே எல்லோரை விடவும் பெரியவர்” என நரியையும் பன்றியையும் சிங்கம் சத்தமிட்டு அழைத்தது. நடுங்கிக்கொண்டே இருவரும் சிங்கத்தின் முன் வந்தனர்.  “தேன் நிரம்பிய முழு தேன் அடையை யார் கொண்டு வருகிறீர்களோ… அவர்தான் உங்களில் பெரியவர்.” என்றது சிங்கம். வேக வேகமாக நரி ஓடியது. பன்றி நிதானமாக, ‘நரி தேன் அடையைக் கொண்டு வரட்டும். சிங்கம் தீர்ப்பு சொல்லட்டும். நாம் புத்திசாலித்தனமாகச் சிங்கத்துக்குப் பாடம் புகட்டுவோம். தேன் அடைக்குத் தேன் எப்படி வருகிறது எனக் கண்டுபிடிப்போம்’ என யோசித்துப் புறப்பட்டது.  நரி தேன் நிரம்பிய ஒரு அடையைக் கொண்டு வந்தது. அதைத் தின்று ஏப்பம் விட்ட சிங்கம், “நரி நண்பா… இந்தத் தேனைக் கொண்டு வந்த நீதான் பெரியவர்.” என்றது.  “கொஞ்சம் பொறுங்கள். பல நூறு பூக்களில் இருக்கும் இனிப்பான திரவத்தைச் சிறிது சிறிதாகச் சேகரித்து அவ்வளவு பெரிய கூட்டைக் க...

யாழிசையின் தோட்டம்

படம்
  யாழிசை ஒரு வேப்பமரத்தின் கீழ் விளையாடிக் கொண்டிருந்தாள். அங்கு காகம் ஒன்று வந்தது. காற்றில் அசைந்த வேப்பமரம், “என்ன காகமே நீ தங்குவதற்கு இடம் தந்தேன். காற்று உன் கூட்டைக் கலைத்துவிடும் போலயே” எனக் கேட்டது. “நீங்கள் ரெண்டு பேரும் தங்குவதற்கு நான்தான் இடம் தந்துள்ளேன்” என்றாள் யாழிசை. “குட்டிச் சிறுமியே… என்னால்தான் உன்னால் மூச்சு விட முடிகிறது. நான் இல்லையென்றால் மனிதர்கள் நீங்கள் யாருமே இல்லை” என்றது வேப்பமரம். “ஹா… ஹா… நான் இல்லையென்றால் நீ வளர்ந்திருக்கவே முடியாது.” மண்ணை முட்டி மேலே வந்த மண்புழு, வேப்பமரத்தைப் பார்த்துச் சொல்லிச் சிரித்தது. கோபம் கொண்ட காகம், “மண்புழு நண்பா அதிகம் பேசாதே… நான் ஒருமுறை தின்று போட்ட வேப்பம்பழம் தான் இன்று வேப்பமரமாக வளர்ந்து நிற்கிறது.” “கொஞ்சம அமைதியா இருக்கீங்களா… எங்க டீச்சர் தான் எனக்கு நிறைய சொல்லித் தருவாங்க. நம்மில் யார் பெரியவர் என்று தெரிந்து வருகிறேன். அதுவரை அமைதியா இருங்க.” என்றாள் யாழிசை. மறுநாள், யாழிசை சோகமாகத் தோட்டத்திற்கு வந்தாள். மண்புழு, “என்ன குட்டிப் பெண்ணே… நான்தான் பெரியவர் என்று உங்க டீச்சர் சொல்லியிருப்பாங்களே… ஆங்… எனக...

தெவசம் - 2

படம்
தி டுத்திடுவென தோட்டத்திற்கு ஓடி பூவரசையும் பலாவையும் இணைத்துக் கட்டிய கொடியில் காயப் போட்டிருந்த சட்டைகளில் ஒன்றை எடுத்து மாட்டிக்கொண்டே... "தாத்தோவ்... நில்லு நானும் வரேன்..." என்றான் தங்கமணி. "நீ எங்கடா வர... வெய்ய தாங்கமாட்ட... வூட்லயே சோத்த தின்னுட்டு வெளாண்ட்டு கெட..." "யாங் இந்த பய வந்தா... மூத்தரம் குடிக்க முடியாதுன்னு வேணாங்குறிய..." என்று முகங் காட்டினாள் சிவப்பாக்கியம். "யாங் வாயில எதாவது வந்துட போவுது... நீலாம் பொம்பளயாடி... ஒப்பனா அவுத்து குடுத்தான் குடிச்சிட்டு வர... இல்ல ஒம்மா அவுத்து குடுத்தாளா... பேச்சு மயிரு பேசுற பேச்சு..." "ந்தாரு... இங்க வச்சிக்கிறதோட நிறுத்திக்கணும். ஆத்தா அப்பன இழுத்தா... நடக்குறதே வேற.... யாங் என் ஆத்தா அப்பன் அவுத்தத வாங்கிட்டு வந்து வக்கனையா திங்கிம்போது தெரிலியே..." எனப் பெருமூச்சு விட்டாள். இருவருக்குமான சண்டையைப் பார்த்துக் கொண்டே... மெதுவாக பின் நகர்ந்தான் தங்கமணி. "இந்த வக்காள ஓழியால வர்றது... இம்மோனும். பள்ளிக்கொடம் போனா என்ன... யாங் நண்டு புடிக்க வரேன். நொண்டு புடிக்க வரேன்ன...

தெவசம் - 1

படம்
கிழக்கே சிங்காரு வீட்டிலிருந்து ஒலிக்கும் தமுரு சத்தத்தோடு அவுரவத்தம்மாளின் கொடி முருங்கை மேலிருந்து சேவலும் கூவுவது விடியலுக்கான அரவங்களாக அன்றாடம் நிகழ்வது போன்ற உடல் பாவனையோடு புரண்டு படுத்தாள் சிவப்பாக்கியம். ஆங்காங்கு சேவல் கூவுவதும் நாய்கள் குரைப்பதுமாக இருந்தபடியால் முனகிக் கொண்டே எழுந்தாள். "செத்த நாழிதான் ஆவுது கண்ணசந்து அதுக்குள்ள விடிஞ்சிருச்சி... என்ன மட்டும் என்ன கல்லயா ஒழ்த்து பெத்தாங்க... நல்லா என் நெளுவ ஆராஞ்சிக்கிட்டுதான் எழுந்திருப்பனான்னு படுத்து கெடக்குறா குச்சிகரி மொவ" என மேற்கே செல்லாத்தா வீட்டுக்கு சாணமெடுக்க நடந்தாள். வழி கூட்டி வைக்குமிடத்தின் அருகில் புளியமரத்தடியில், நாளைக்கு ஒரு நாள் விட்டால் அதுவே செத்துப்போகும் நிலையிலிருந்த மாடொன்றை கறி போடத் தயாராக கட்டி வைத்திருந்தனர்  பூராயிரும் சேங்கணத்தாரும். பாரையும் சுத்தியலுமாக  கறி போடும் இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தான் கணேசன். "சின்னவன... எலும்பு கறியா ஒரு கிலோ எடுத்து வையி... பயல அனுப்புறேன்" என சாணமெடுக்கச் சென்ற சிவப்பாக்கியம் கணேசனிடம் சொல்லிவிட்டு சாணத்தோடு திரும்பினாள்....

சாவுக் கழிச

படம்
"யே... வில்லழகி.... வெளக்கமாரு ஒடிக்க வர்றீயா?" "இந்த பன்னிகுட்டிவோள அவுத்து வுட்டேன். செத்த நேரம் மேச்சிட்டு கைனி தண்ணி காட்டி கட்டிப் போட்டுட்டு வர்றேன் செத்த நாழி இரு." "யே... கமலா.. வெளக்கமாரு ஒடிக்க வர்றீயா?" "எந்த பக்கம் போறீங்க..."  "வடக்குவெளிதான் மரக்காயமூட்டு தோப்பு இருக்குல்ல அங்கதான். வெள்ளையம்மா வர்றன்னுது அத கூப்புடு... வேற ஆராரு வர்றன்னுது. தே... வில்லழகி வரா நீனு, நானு, வெள்ளையம்மா வந்தா நாளு பேரு கணக்காச்சி... நீராரத்த ஒரு மொரடு ஊத்திட்டு வர்றன்" என்று காய வைத்திருந்த மா வடுவை எடுத்துக் கொண்டிருந்தாள் கமலா.  "ஓ.... செயிலம்மா....வ்...." வில்லழகி தொண்டை அடைக்க கத்தினாள்.  கமலாவும் செயிலும் வில்லழகியின் வீடு வந்தனர். பன்னிக்குட்டிகளை கட்டிவிட்டு மூங்கில் படலை அடைத்துவிட்டு வந்தாள் வில்லழகி. "எங்கியே வெள்ளையம்மா வருதுன்னீங்க.... வூட்டுல போய் கேட்டன் ராத்திரி அந்தாளு போட்டு அடிச்சிருக்கான் கோச்சிக்கிட்டு ஆத்தா வூட்டுக்கு பிச்சனூரு பூட்டாளாம். அவ பெரிய மொவஞ் சொன்னான். அந்தப் பய அப்படியே ஆத்தாளாட்டும்டீ...நெறத்த...

படையல்

படம்
" நா லு மாசமா படுத்தப் படுக்கயா கெடந்தேன். ஒரு நாயி வந்து சீண்டுல. இன்னக்கி பொணச்சிட்டு கெடக்குறாளுவோ... ஓப்புடியாளுந் தானும்.  திங்க சோறத்து... குடிக்க தண்ணியத்துதான்டீ போவீங்க சக்காள்த்திவோளா...  ஒரு டீ தண்ணிக்கு வழியுண்டா? ஒரு மாத்துர மருந்துக்கு வழியுண்டா? இதே எடத்துலதான்... அந்த பெரிய குச்சிக்கரி மல்லாந்து கெடக்குறாள அந்த எடத்துலதான் பெரலக்கொட தெம்பில்லாம படுக்கைல மூத்துரம் போய்ட்டு கெடந்தேன். முடியாத பொம்பளயாச்சேன்னு ஒருத்தி வந்து என்னான்னு எட்டி பாத்துருப்பாளுவோளா..  வந்ததெல்லாம் வச்சிக்கிட்டு வக்கனையா திங்கிறாளுவோ...யாரு ஆயி அப்பன் சம்பாரிச்சிது.  பொழுதுக்குள்ள ஆளா பாதியா கெளம்பி பூடுலண்ணா....கள்ளிமட்ட வச்சி கட்டிடமாட்டன் ரெண்டு செறுக்கிவொளயும்....  வாய கொண்டாந்தவ வூட்டு உள்ளப் போனாளாம்...  வாழப்பழம் கொண்டாந்தவ வாசல்ல நின்னாளாம்...  யாங் ஒழையல்ல திண்ணு....யாங் புருசன் ஒழையல்ல திண்ணு நொட்டிப்புட்டு ... ஒரு மொரடு நீராரத்துக்கு வழியில்ல, இன்னக்கி எனுத்த பாரு என் மொவள்த்த பாருன்னு நல்லா விரிச்சிட்டு தூங்குறாளுவோ...." "யாங்.... ஓம் மொவளுவோளுக்குதான ...