இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சந்தைக்குப் போன கயல்

படம்
கயல் தன் அம்மாவோடு சந்தைக்குச் சென்றாள். அங்கு வகை வகையான காய்கறிகள், பழங்கள், கீரைகள் எனக் குவிந்து கிடந்தன. ஒரே கடையில், பீட்ரூட், கேரட், வெண்டைக்காய், கத்தரிக்காய் இருந்தன.  கயல் ஒரு பீட்ரூட்டை கையில் எடுத்தாள். “பாப்பா… நான் பேசுறது கேக்குதா…”  கயல் தன் அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள். அம்மா, காய்கறிகள் வாங்குவதில் மும்முரமாக இருந்தார். கயல், கேரட் ஒன்றையும் எடுத்துப் பார்த்தாள்.  “பாப்பா… நான் பேசுவதாச்சும் கேக்குதா…” கயல் இம்முறை காய்கறிக் கடைக்காரரைப் பார்த்தாள். அவர் காய்கறிகளை எடை போடுவதில் கவனமாக இருந்தார். “பாப்பா… உன் கையில்தான் இருக்கிறோம். நாங்கள்தான் பேசுகிறோம்” என பீட்ரூட்டும் கேரட்டும் சொன்னது. கயல் ஆச்சரியமாகப் பார்த்தாள். “என்னை வாங்கினால், உனக்கு நிறைய சத்துகளைத் தருவேன். எனக்குதான் அதிகச் சத்துகள் உள்ளன.” என்றது பீட்ரூட். “எனக்குதான் அதிகச் சத்துகள் உள்ளன. என்னை நீ கழுவிவிட்டு அப்படியே கூடச் சாப்பிடலாம்.” என்றது கேரட். “இவர்களை விட நான் உனக்கு அதிகச் சத்துகளைத் தருவேன். ஹா… ஹா…” எனச் சிரித்தது வெண்டைக்காய்.  “என் அம்மாவிடம், உங்கள் மூன்று பேரையும் ...

கட்டெறும்பின் படகு சவாரி

படம்
  கட்டெறும்பு ஒன்று ஓர் மரத்தின் அடியில் நின்று யோசனை செய்து கொண்டிருந்தது. குரங்கைப் போலத் தாவிக் குதித்து விளையாட ஆசைப்பட்டது. கிளியைப் போல பறக்க நினைத்தது.  ஒருமுறை, தவளை ஒன்று “படகு சவாரி போகலாமா” எனக் கட்டெறும்புவிடம் கேட்டது. அதற்குக் கட்டெறும்பு, “படகு என்றால் எப்படி இருக்கும்” எனக் கேட்டது. “அதோ தூரத்தில் ஒரு ஏரி தெரிகிறது பார். அந்த ஏரிக்கு மீன் பிடிக்க படகில்தான் வருவார்கள். நான் ஒருமுறை அதில் ஏறி சவாரி செய்தேன். எனக்கு ஜாலியாக இருந்தது.” என்று தவளை சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டது. கட்டெறும்புக்கு படகில் சவாரி செய்ய ஆசை வந்துவிட்டது. ஒருநாள், கட்டெறும்பு தவளையைத் தேடி அலைந்தது. எங்கு தேடியும் தவளை கிடைக்கவில்லை. அங்கு ஒரு ஆறு ஓடியது. அதன் அருகே சென்ற கட்டெறும்பு, படகு வருமா எனப் பார்த்து நின்றது. அங்கு படகு வரவில்லை. தூரத்தில் ஆறு தொடங்கும் அந்தப் பெரிய ஏரி தெரிந்தது. அங்கு சிலர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த கட்டெறும்பு, அதில் ஏறிப் பயணிக்க நினைத்து அங்கு எப்படி செல்வது எனத் தெரியாமல் சோகமாக நின்றது.  அப்போது அங்கு வந்த ஆமை ஒன்று, கட்டெறும்...

தூண்டிலும் சில நண்பர்களும்

படம்
  அந்தக் குளத்தில் ஆமை, தவளை, மீன் வாழ்ந்து வந்தன. மூன்றும் நண்பர்களாக இருந்தன. நீர்க்கோழி மட்டும் தனியாக இருந்தது. அந்த மூன்று பேரிடமும் பேசுவதில்லை.  ஆமையும் மீனும் நீந்தி விளையாடுவதை, தவளை பார்த்து இரசித்துக் கொண்டிருந்தது. நீருக்குள் புழு ஒன்று நெளிவதைப் பார்த்த ஆமை, அதைச் சாப்பிடச் சென்றது. அதைப் பார்த்த மீன், “அதைச் சாப்பிடாதே… அது தூண்டில். உன்னைப் பிடித்துச் சென்று விடுவார்கள்” என்றது. மீன் பார்க்காத நேரத்தில் அந்தப் புழுவைத் தின்று கொண்டிருந்தது ஆமை. சிறிது நேரத்தில் ஆமையைப் பார்த்த மீனுக்கு அதிர்ச்சி. ஆமை தூண்டில் முள்ளில் மாட்டித் தவித்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த மீன், தவளையைத் தேடிச் சென்றது.  தூண்டில் போட்டவர் கரைக்கு மேல் சென்று குடிக்க தண்ணீர் பிடிக்கச் சென்றிருந்தார். கரை ஓரத்தில் வந்த மீன், “நண்பா… நம் ஆமைக்கு ஆபத்து. தூண்டில் புழுவைத் தின்றுவிட்டது. அதன் வாயில் முள் மாட்டியுள்ளது.” எனத் தவளையிடம் சொன்னது. தவளை நீருக்குள் குதித்து மூழ்கி ஆமையைப் பார்த்தது. ஆமை தன் வாயில் மாட்டியிருந்த முள்ளை எடுக்கப் போராடியது.  எல்லாவற்றையும் பார்த்துக்...

பிக்கி

படம்
  சிறிய கிராமத்தில் பால் வியாபாரம் செய்து வருகிறார் கமலியின் தாத்தா. அவரது வீட்டில் அழகான ஒரு பன்றிக் குட்டியை வளர்த்து வந்தார். அவருக்கு துருவன், கமலி என இரண்டு பேரக் குழந்தைகள். இருவரும் பன்றிக்குட்டிக்கு பிக்கி எனப் பெயர் வைத்தனர். துருவனும் கமலியும் பிக்கியோடு விளையாடுவார்கள். பிக்கி சேட்டைக்காரி. தோட்டத்தில் எல்லாச் செடிகளையும் தோண்டித் தோண்டி சாய்த்து விடுவாள். வீட்டுக்குள் நுழைந்து கமலியின் விளையாட்டுப் பொருட்களை உடைப்பாள். துருவனின் செருப்புகளை எங்காவது கொண்டு போய் போட்டு விடுவாள். எல்லோரும் சாப்பிட தாத்தா கிழங்கு வாங்கி வருவார். யாருக்கும் தெரியாமல் எல்லாக் கிழங்குகளையும் பிக்கி தின்று விடுவாள். பிக்கியின் சேட்டைகளை தாத்தாவிடம் சொன்னார்கள் துருவனும் கமலியும். “அவள் என் பொருள்களை எதுவும் செய்வதில்லை. அவள் எனக்கு உங்களைப் போல் செல்லம்தான்.” என்றார். பால் வியாபாரத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார் தாத்தா. பாத்திரங்களில் பாலை நிரப்பி மூடி வைத்தார். சட்டை போட்டு வருவதற்குள், ஒரு பாத்திரத்தில் இருந்த பால் கீழே ஊற்றிக் கிடந்தது.  தாத்தாவிற்குக் கோபம் வந்தது. பிக்கியை தோட்டத்...

கார்முகிலும் நீலத்திமிங்கலமும்

படம்
  கார்முகில் தன் தாத்தாவோடு மலை உச்சிக்குச் சென்றாள். அவர்கள் வீடு அழகான மலைக் கிராமத்தில் உள்ளது. உயரமாக வளர்ந்திருந்த கோரைப் புற்களை கைகளால் உரசி உரசி விளையாடிக் கொண்டிருந்தாள். அவர்கள் அமர்வதற்கு ஒரு இடத்தைத் தேடினர். யானையின் தலையைப் போல இருந்த அழகான பாறை மீது அமர்ந்தனர். “கார்முகில்…” என்றார் தாத்தா. “சொல்லுங்க தாத்தா…” என்றாள். “உன்னைக் கூப்பிடவில்லை. அதோ பார் கார்முகில்.” என்றார். “என் பெயர்தானே கார்முகில்” என்றாள். “அதோ அந்த கருத்த மேகத்தின் பெயரும் உன் பெயரும் கார்முகில்தான். முகில் என்றால் மேகம். கார்முகில் என்றால், கருத்த மழை தரும் மேகம்னு அர்த்தம்” என்றார். கார்முகில் வியப்புடன் தாத்தாவையும் மேகங்களையும் பார்த்தாள். “தாத்தா, அதோ பாருங்க அந்த மேகம் நம் வீட்டுக் கன்றுக்குட்டியைப் போல் உள்ளது” “இதோ இங்கே பார் நம் தோட்டத்தில் இருக்கும் ஆலமரத்தைப் போல மேகம்” என்றார் தாத்தா. “அங்கே பாருங்கள் தாத்தா, மிகப் பெரிய மீன் போல மேகம்.” “அது மீன் என்று நினைக்க வேண்டாம். நீலத்திமிங்கலம் இப்படித்தான் பெரிதாக இருக்கும்” “பெரியது என்றால் எவ்வளவு பெரியது தாத்தா” “அதன் இதயத்தில் நீ அமர்ந்து...

பச்சைக் கொம்பனும் பாசக்கார எறும்பும்

படம்
  குளத்து ஓரத்தில் அழகான புற்களும் மரங்களும் இருந்தன. அருகே கரும்பு நன்றாக விளைந்திருந்தது. அங்கு வசித்து வந்த எறும்பும் பச்சைக்கொம்புப் புழுவும் நண்பர்களாக இருந்தன. இரவு நேரமானால், கரும்பின் சோகையை நறுக் நறுக் என்று கடித்துத் தின்னும் பச்சைக் கொம்பன். “நண்பா பச்சைக் கொம்பா கொஞ்சம் தூங்க விடுகிறாயா?” என்றது எறும்பு. “நான் என்ன செய்ய நண்பா, இரவில்தான் என்னால் சாப்பிட முடிகிறது” என்றது பச்சைக் கொம்பன். வேறு இடம் மாற்றித் தூங்கியது எறும்பு. மறுநாள் காலையில் தன் நண்பன் புழுவைத் தேடிச் சென்றது. அங்கு புழுவைக் காணவில்லை. பலமுறை அழைத்துப் பார்த்தது. எதிரே வந்த நண்டு, “எறும்பு நண்பா யாரைத் தேடுறீங்க” என்றது. “எனது நண்பர் பச்சைக் கொம்பனைக் காணும்.” என்றது எறும்பு. “குளத்தில் ஒரு இலையின் மேல் விளையாடிக் கொண்டிருந்தது” எனச் சொல்லிவிட்டு நண்டு தன் வீட்டுக்குச் சென்றது. தானும் விளையாடலாம் என மகிழ்ச்சியோடு சென்றது எறும்பு. எறும்பைப் பார்த்த பச்சைக் கொம்பன், “வா நண்பா வந்துட்டியா… உனக்காகத்தான் காத்திருந்தேன்.” என்றது பச்சைக் கொம்பன். “ஓ… ஜாலி… நானும் விளையாட வரவா நண்பா… என்னிடம் சொல்லியிருந்தான்...

காட்டின் தலைவர்!

படம்
அழகான அந்தக் காட்டில், விலங்குகளும் பறவைகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. ஒருமுறை, வேறு காட்டிலிருந்து நிறைய நரிகள் கூட்டமாக அங்கு வந்தன. “வணக்கம் நண்பர்களே…! நாங்கள் வழி தெரியாமல் உங்கள் காட்டிற்கு வந்துவிட்டோம். உங்கள் காடு மிகவும் செழிப்பாக உள்ளது. எங்களுக்கு உங்கள் காடு பிடித்திருக்கிறது. நாங்கள் இங்கு தங்க இடம் தந்தால், எங்கள் காட்டில் கற்ற வித்தைகளை உங்களுக்குக் கற்றுத் தருவோம்.” என்றன நரிகள். நரிகள் இனிமையாகப் பேசுவதைக் கேட்ட மான்கள், “நீங்க இங்க தங்குறதுல எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல. அப்படி என்ன எங்களுக்கு கற்றுத் தரப் போறீங்க.” என்றன. நரிக் கூட்டத்தின் மூத்த நரி, “அதோ அந்த நாவல் மரத்தைப் பாருங்கள். அதிலிருந்து முந்திரிப் பழங்கள் விழும்” என்றது. எல்லா விலங்குகளும் பறவைகளும் மரத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தன. நரி ஒன்று கீழே நிறைய முந்திரிப் பழங்களைப் போட்டது. எல்லோரையும் கீழே பார்க்கச் சொன்னது. “ஓ… என்ன ஆச்சரியம். ஐ… ஜாலி… ஜாலி…” என முந்திரிப் பழங்களைப் பார்த்துத் துள்ளிக் குதித்தன பன்றிகள்.  நாவல் மரத்திலிருந்த ஒரு காகம் பறந்து கீழே வந்தது. காகத்தைப் பார்த்த...

நண்பனைக் காணவில்லை

படம்
“அன்பு கழுதையே… என் நண்பனைப் பார்த்தாயா?” “காக்கையே… உன் நண்பன் யார்? உன் நண்பன் என்ன அவ்வளவு பெரிய ஆளா? நான் தெரிந்து வைத்திருக்க” என்றது கழுதை. “மன்னிக்கவும் அன்பு கழுதையே… என் நண்பன் எருமை. அவன் குளத்தில் விளையாடும்போது, அவன் மேல் அமர்ந்து நானும் விளையாடுவேன்.” என்றது காகம். கழுதை சத்தமாகச் சிரித்துவிட்டு, “நீயும் எருமையும் நல்ல பொருத்தமான நண்பர்கள்.” என்றது. காகம் அங்கிருந்து சோகமாகப் பறந்தது. பல இடங்களில் தன் எருமை நண்பனைத் தேடி அலைந்தது. அப்போது காகத்துக்கு ஒரு யோசனை வந்தது. தன் நண்பன் எருமைக்கு இசை என்றால் மிகவும் பிடிக்கும். சத்தமாக ஏதாவது இசையை ஒலிக்கவிட்டால், எருமை எங்கிருந்தாலும் வந்துவிடும் என நினைத்தது.  “அன்புள்ள மயிலே… என் நண்பனைக் காணவில்லை. நீ அகவும் சத்தம் இனிமையாக இருக்கும். நீ கொஞ்ச நேரம் அகவினால் என் நண்பன் கிடைக்க உதவியாக இருக்கும். குயிலையும் அழைத்து வருகிறேன்.” என்றது காகம். சிறிது நேரத்தில் குயிலும் வந்தது. மயில் அவகத் தொடங்கியது. குயில் கூவத் தொடங்கியது. சுட்டெரிக்கும் சூரிய ஒளியிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள குளத்தில் மூழ்கியிருந்தது எருமை. குயில் கூவும்...

காட்டுக்குப் போன மிட்டு!

படம்
  அந்த அழகான ஊரின் தெருவில் நிறைய நாய்கள் வளர்ந்து வந்தன. அதில் மிட்டு என்கிற நாயும் ஒரு பூனையும் நெருங்கிய நண்பர்கள். நாயும் பூனையும் தனியாக விளையாடிக் கொண்டிருந்தன.  அப்போது அங்கு வந்த பன்றி, “நான் காட்டிற்குச் சென்றேன். அங்கு மான், புலி, நரி என நிறைய நண்பர்கள் எனக்குக் கிடைத்தார்கள்.” என்றது. “அவர்கள் பார்க்க எப்படி இருப்பார்கள். என்னைப் போலச் சண்டை செய்வார்களா?” என்றது நாய்.  “உன்னை விடப் பெரியவர்கள் அங்கு இருப்பவர்கள்” என்று சொல்லி நாயைப் பார்த்து பன்றி சிரித்தது. நாய்க்கு கோபம் வந்தது. “சரி வா காட்டிற்குப் போகலாம்” என்றது நாய். “நான் வரவில்லை. என் மீது அன்பு வைத்து வளர்ப்பவர்களைப் பிரிந்து வரமாட்டேன்” என்றது பூனை. “நானும் வரமாட்டேன். நான் திங்க முந்திரிப்பழம் வைத்திருப்பார்கள். நான் வீட்டிற்குப் போக வேண்டும்” என்றது பன்றி. இருவரையும் முறைத்துப் பார்த்தது நாய். காடு இருக்கும் திசை நோக்கி ஓடியது. பன்றியும் பூனையும் நாய் செல்லும் திசையையே பார்த்து நின்றன. நாய் வழி தெரியாமல் வேகமாக ஓடியது. நீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தது. நாயைத் தேடி பன்றியும் பூனையும் வந்தன. கிணற்...

யார் வீடு பெரியது!

படம்
  பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் விளையாடப் புறப்பட்டான் நிலன். கையில் பம்பரத்தோடு வந்தான் வலன். இருவரும் வழக்கமாக விளையாடும் இடம் நோக்கிச் சென்றனர். புளியமரத்தின் அடியில் பம்பரம் சுற்றி விளையாண்டார்கள். மரத்தின் உச்சியில் காகம் கத்துவதைக் கேட்டு அண்ணாந்து பார்த்தனர். காக்கை அதன் கூட்டில் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டியது. “காக்கையோட வீடு அந்தக் கூடுதானா நிலன்” என்றான் வலன். “ஆமாம்டா, சரி வலன் யார் யாருக்கு எங்கெல்லாம் வீடு இருக்கு. யார் வீடு பெருசுன்னு பாப்போமா?” என்றான் நிலன். “போகலாம், அப்படியே பாத்துட்டு நம்ம வீட்டுக்குப் போயிடலாம்” என்றான் வலன். “அதோ பார் நத்தையை, எங்கே போகிறாய் நத்தையே உன் வீட்டுக்கா?” “என் வீட்டில்தானே நான் இருக்கிறேன்” என்றது நத்தை. ஆமையும் வந்து சேர்ந்தது. “என்ன நத்தையாரே ஏன் நிற்கிறாய்.” என்றது ஆமை. “இதோ ஆமையும் வந்துவிட்டது. எனக்கும் ஆமைக்கும் ஒரே மாதிரியான வீடுதான்” என்றது நத்தை. “அது ஒன்றுமில்லை தம்பிகளா… எங்கள் மேல் உள்ள ஓடுதான் எங்கள் வீடு. நடக்கும்போது வெளியே வருவோம். மற்ற நேரத்தில் உள்ளே இருப்போம்.” என்ற ஆமை, “வா நத்தை நண்பா போகலாம்” என்றது. “என்ன தம்...