கார்முகிலும் நீலத்திமிங்கலமும்
கார்முகில் தன் தாத்தாவோடு மலை உச்சிக்குச் சென்றாள். அவர்கள் வீடு அழகான மலைக் கிராமத்தில் உள்ளது. உயரமாக வளர்ந்திருந்த கோரைப் புற்களை கைகளால் உரசி உரசி விளையாடிக் கொண்டிருந்தாள். அவர்கள் அமர்வதற்கு ஒரு இடத்தைத் தேடினர். யானையின் தலையைப் போல இருந்த அழகான பாறை மீது அமர்ந்தனர். “கார்முகில்…” என்றார் தாத்தா. “சொல்லுங்க தாத்தா…” என்றாள். “உன்னைக் கூப்பிடவில்லை. அதோ பார் கார்முகில்.” என்றார். “என் பெயர்தானே கார்முகில்” என்றாள். “அதோ அந்த கருத்த மேகத்தின் பெயரும் உன் பெயரும் கார்முகில்தான். முகில் என்றால் மேகம். கார்முகில் என்றால், கருத்த மழை தரும் மேகம்னு அர்த்தம்” என்றார். கார்முகில் வியப்புடன் தாத்தாவையும் மேகங்களையும் பார்த்தாள். “தாத்தா, அதோ பாருங்க அந்த மேகம் நம் வீட்டுக் கன்றுக்குட்டியைப் போல் உள்ளது” “இதோ இங்கே பார் நம் தோட்டத்தில் இருக்கும் ஆலமரத்தைப் போல மேகம்” என்றார் தாத்தா. “அங்கே பாருங்கள் தாத்தா, மிகப் பெரிய மீன் போல மேகம்.” “அது மீன் என்று நினைக்க வேண்டாம். நீலத்திமிங்கலம் இப்படித்தான் பெரிதாக இருக்கும்” “பெரியது என்றால் எவ்வளவு பெரியது தாத்தா” “அதன் இதயத்தில் நீ அமர்ந்து...