உருவாஞ் சுருக்கு
"பெரியவனுக்கு சேதி சொல்லியாச்சா... வெடி வாங்க யாரு போயிருக்கா... எலேய் கொண்டையா அழுவுறத வுட்டுபுட்டு ஆவுற சோலிய பாரு..." மனச கல்லாக்கிக்கிட்டு பரபரப்பா அலஞ்சாரு மணிவாசகம் மாமா... "அலோ... யாரு சேராமனா.... அப்பா... தவறிட்டாரு தம்பி..." வள்ளுவர் கோட்ட சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது தான், அந்த அழைப்பை எடுத்தான். 7 நொடிகளே இருந்த சிவப்பைப் பார்த்ததும், வண்டியை ஓரமாகத் தள்ளிக் கொண்டு வந்து நிறுத்திவிட்டு அழ ஆரம்பித்தான். சிக்னலில் நின்றிருந்த ட்ராபிக் போலீஸ் விசாரிக்க ஆரம்பித்தார். ஜெயராமனைத் தேற்றி அனுப்பி வைத்தார். அறைக்குச் சென்றதும் எறாங்குடி கருப்பந்தோட்டம் தாண்டனும்னா ஆத்தா குடுத்த சீம பாலு வெளிய வந்துடும்.இப்போ அங்க அங்க வூடு மொளச்சிடுச்சி.... கள்ளாங்கொளம்,வெட்டியாங்கொல்ல,ஆகாசவீரங்கோயிலுனு அப்பாவும் நானும் பெரிய மாட்ட தேடி அலஞ்சது நெனவுல வந்து நிக்கிது. அப்படிதான் ஒரு தடவ.... பெரியவன நீ அம்மாசி வூட்டு கொல்ல வழியா வா...நான் மரக்காயன் தோப்பு வழியா பூந்து வர்றேன்...எவன்னு பாத்து பஞ்சாயத்துல நிறுத்திடுனும்...ஒக்காள ஓழி மொவனுவோளுக்கு ஏமூட்டு கொல்லதான் கெட...