இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெரமன

படம்
ரெ ட்டியாரு பாத்து மகாலிங்கத்துக்கு ஒதுக்குனதுதான் தெக்க ஓட பக்கம் பெரியாண்டவங் கோயிலுகிட்ட இருக்க வயலு. மே சாதிக்காரங்க வய சுத்தி நடுவுல மகாலிங்கம் வய... அவங்கப்பா மம்மல ரெட்டியாருக்கு ஒழச்ச ஒழப்ப 'நாலு சனம் சொல்லும் நாயக்கன் வூட்டு நாய் சொல்லும் பேய் சொல்லும் பெரியாண்டவங் கத்தி சொல்லும்... ராப் பகலா கம்முழிச்சி தண்ணி பாச்சி ஒத்த ஆளா சூரியங் கௌம்ப முன்ன அண்ட எடுத்து நாத்தடிக்க நாலு ஆளுவோல கூட்டியாந்து ஓடி ஆடி வெள்ளாம பாத்து நெல்லு மூட்ட வூடு வர வரைக்கும் வயலுக்கு வர மாட்டாரு பெரிய ரெட்டியாரு. கரும்பன் இருக்கான் எனக்கு சோத்துக்கு கொறச்சலா சொகத்துக்கு தவிச்சலான்னு வூட்டுலயே கெடப்பாரு.....நாப்பது ஏக்கரு வய ரெட்டியாரூட்டுத்து சுத்துப்பட்டுல மிஞ்சிக்க ஆளு இல்ல இவரு சொத்துக்கு.. காலங் காலமா அள்ளி குடுத்த கையி மம்மல ரெட்டியாரு குடும்பத்துக்கு. நாப்பது ஏக்கருக்கும் சரியான ஆளுவோ இருந்தாலும் கரும்பங் காவ காக்குற வயலு நல்ல வெள்ளாமன்னும் ராசிக்காரன்டான்னும் ஒவ்வொரு தடவ அறுப்பு முடிஞ்சதும் ரெண்டு மூட்ட நெல்லு போயிடும் வூட்டுக்கு... மத்த வயலுக்கு காவ இருக்க ஆளுவோ மனசு கஷ்டப்பட்டா நமக்கு ஏது சோ...

இருபத்தியோராம் நூற்றாண்டின்  அழகி.!

படம்
தஞ்சாவூர்  ஜங்ஷனிலிருந்து  மஞ்சத்திடல் செல்ல  வேண்டும். அடிக்கடி  செல்வது வழக்கம். வேலையொன்றுமில்லை பெரியப்பா வீடு அங்கு. எக்ஸ்பிரஸ் நிக்காது. பெரும்பாலும்  நான்  பேசஞ்சரில் செல்வதே வழக்கம். நடைபாதை  வியாபாரிகளுக்கு டிக்கட்டே  தேவையில்லை. அடுத்தடுத்த ஸ்டாப்பில் ஏறி இறங்கி வியாபாரம் செய்வார்கள். கீரை விற்கும் ஆயா ஏறி இறங்கும்போதெல்லாம் டல்ஹௌசிக்கு நன்றியை சொல்வேன். படியிலமர்ந்து, படியில் நின்று, படியில் தொங்கி வரும் எவரையும் நான் கண்டு கொள்வதில்லை. இன்று விபத்தென்றால் அன்றாடம் பயணிக்கும் எல்லோர்க்கும் தெரிந்திருக்கும். இருந்தும் மறுநாள் தொங்கும் அறிவற்றவர்களை  நினைத்து கவலைப்படப் போவதில்லை. ரசனையற்ற மனிதர் என நினைக்கலாம்.  உண்மைதான் ‘மரணத்தை  எனக்கு  ரசிக்கத் தெரியாது’. பெட்டி  காலியாக இருந்தாலும் தினம் நின்றே வந்த பழக்கத்தில் உட்கார மறந்தவரை பார்த்து சிரித்திருக்கிறேன். நான்காவது பெட்டியில் எடுத்த பிச்சையை ஒன்பதாவது பெட்டியில் வெறுங்கை நீட்டி நிற்கும் சிறுவனுக்கு பாதியை கொடுத்து நகர்ந்த முதியவரை ரசித்திருக்கிறேன். "...