காட்டின் தலைவர்!
அழகான அந்தக் காட்டில், விலங்குகளும் பறவைகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. ஒருமுறை, வேறு காட்டிலிருந்து நிறைய நரிகள் கூட்டமாக அங்கு வந்தன. “வணக்கம் நண்பர்களே…! நாங்கள் வழி தெரியாமல் உங்கள் காட்டிற்கு வந்துவிட்டோம். உங்கள் காடு மிகவும் செழிப்பாக உள்ளது. எங்களுக்கு உங்கள் காடு பிடித்திருக்கிறது. நாங்கள் இங்கு தங்க இடம் தந்தால், எங்கள் காட்டில் கற்ற வித்தைகளை உங்களுக்குக் கற்றுத் தருவோம்.” என்றன நரிகள். நரிகள் இனிமையாகப் பேசுவதைக் கேட்ட மான்கள், “நீங்க இங்க தங்குறதுல எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல. அப்படி என்ன எங்களுக்கு கற்றுத் தரப் போறீங்க.” என்றன. நரிக் கூட்டத்தின் மூத்த நரி, “அதோ அந்த நாவல் மரத்தைப் பாருங்கள். அதிலிருந்து முந்திரிப் பழங்கள் விழும்” என்றது. எல்லா விலங்குகளும் பறவைகளும் மரத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தன. நரி ஒன்று கீழே நிறைய முந்திரிப் பழங்களைப் போட்டது. எல்லோரையும் கீழே பார்க்கச் சொன்னது. “ஓ… என்ன ஆச்சரியம். ஐ… ஜாலி… ஜாலி…” என முந்திரிப் பழங்களைப் பார்த்துத் துள்ளிக் குதித்தன பன்றிகள். நாவல் மரத்திலிருந்த ஒரு காகம் பறந்து கீழே வந்தது. காகத்தைப் பார்த்த...