இடுகைகள்

வாசம்

படம்
"அண்ணங் பணங் கிணம் அனுப்புச்சா இல்லியா?" "நாளு வந்து சாவங்காட்டியும் நாழில பூடுவம் போல.... பணமும் அனுப்புல கிணமும் அனுப்புல... கன்னு யாவாரம் பன்றேன்., கன்னு யாவாராம் பன்றேன்னு.. எவள்ட்ட வாங்கி குடிச்சிட்டு கெடக்குறான்னு தெர்ல" தீபாவளி,பொங்கல், தமிழ் வருடப்பிறப்பு தவறாது அப்பாவின் வருகையை எதிர்பார்க்கலாம். வானத்து நீல... இரண்டு பக்கமும் பாக்கெட் வைத்த முழுக்கை சட்டை எப்பவும் அணிந்திருப்பார். அரைத் தூக்கத்தில் சண்டையிட்டுக் கொள்ளும் முனகல் கேட்கும். அதனூடே வரும் வாசனைதான் அப்பாவின் வருகையை உறுதி செய்யும். "கன்னு வித்த காச தலமாட்டுல வச்சிட்டு தூங்குனேன் எவனோ எடுத்துட்டான்" என அப்பா சொல்வதை அம்மா நம்பவில்லை. இவர்களின் சச்சரவுகள் ஒருபுறமிருக்க...கொண்டு வந்த பையைத் திறந்து திறந்து பார்ப்போம் நானும் அக்காவும். கால் கிலோ ஓல பக்கோடாவை பல் விளக்காத அந்தக் காலையில் அவசர அவசரமாக அக்கா உண்பாள்.  வீடே வாசம் பரப்புகிற அந்த டப்பியை ஒளித்து வைத்துக்கொண்டு முகர்ந்து பார்ப்பேன். "கன்னு வித்து கிழிச்சதெல்லாம் போதும்...முச்சாரமனத்துல(முத்துசேர்வாமடம்) ஒரு ஆளு ...

பாட்டு

படம்
"நம்ம திட்டமிடாத ஒரு பொழுதில் நம் வாழ்க்கைக்குள்ள ஒரு பாடல் வருது அதனாலதான் அது ஸ்பெஷலா இருக்கு". கவிஞர் வெய்யில் கலந்துகொண்ட இந்த  நிகழ்ச்சியை  அப்போதே பார்த்துவிட்டேன். அதே நிகழ்ச்சியில் 'நாதம் என் ஜீவனே' பாடலை ஒரு பெண் பாடியிருப்பார். அதையும் இந்தக் காணொளியையும் அடிக்கடி பார்ப்பேன். குறிப்பாக வெய்யிலின் குரல் அவர் கவிதையைப் போன்றே எனக்குப் பிடித்திருந்தது ஒரு காரணம். சமீபத்தில் கூட அவரின் முகநூல் பக்கத்தில் 'ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது' பாடலை பதிந்திருந்தார். அதை எனது நண்பருக்கு அனுப்பியிருந்தேன். "வாவ்...வெய்யில் கவிதைகள் ரொம்ப பிடிக்கும் அவர் பாடுவார்னு இப்பதான் தெரியும்"னு அனுப்பியிருந்தார்.  இந்தப் பதிவு வெய்யிலுக்கானதல்ல., வெய்யிலாலானது. இப்பல்லாம் பேசுறதுக்கும் எழுதுறதுக்குமே ஒரு தயக்கம் இருக்கு...'பூமர் அங்க்கிள்'னு கமெண்ட் பண்ணிடுவாங்களோன்னு... மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது எங்கோ ஒலிக்கிற பாடல் காற்றில் மிதந்து காதில் கேட்கும் என சொல்லியிருப்பார் வெய்யில். அந்த உண்மைக்காகத்தான் இதை எழுதணும்னு நினைக்கிறேன். முதல் டி.வி...

பத்தாயம்

படம்
த ஞ்சாவூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக ஹரித்துவாரமங்கலம் சென்று, அங்கிருந்து மாற்றுப் பேருந்து ஏறினால் 'மருவத்தூர்' எனும் குக்கிராமம். அங்குதான் வேலை. பன்னெடுங்கால சிவன் கோயிலை மீட்டுக் கட்டியெழுப்ப வேண்டும். தாய் மாமனுக்கு முதல் காண்ட்ராக்ட் வேலை. பனிரெண்டாம் வகுப்பு முடித்த கோடை விடுமுறை என்பதால் நானும் வேலைக்குச் சென்றிருந்தேன். அர்த்த மண்டபம், மஹா மண்டபம், கர்ப்பக் கிரகம் என இருந்த பழைய பாழடைந்த கருங்கற் கோயிலை அப்படியே பிரித்து அப்படியே கோர்க்க வேண்டும். விறுவிறுப்பாக வேலைகள் நடக்கும். ஆளாளுக்கு பாடல்கள் போட வாய்ப்புண்டு. நான் அப்போது சாம்சங் பட்டன் போன் வைத்திருந்தேன். ஒரு ஜி.பி. மெமரி கார்டு முழுக்க மதுரை சந்திரன் பாடல்கள்தான். 'உன்னை பெத்த தோசத்துக்கு ஒரு மண்ணை பெத்தாலும் வாழ்ந்திருப்பேன். கண்ணை வித்து சித்திரம் வாங்கிய கதையா போச்சு... எலே கடன்காரனே தொலஞ்சி போன்னு கட்சி மாறியாச்சு, பெத்தவளும் கட்சி மாறியாச்சு' 'இலங்கையைக் குரங்கு எரித்தது அன்று. இலக்கியம் கூறும் சரித்திரம் உண்டு.' 'நாத்துனா மகனுக்கு என் பொண்ணக் கொடுத்து...' 'மாடு ம...

தெவசம் - 5

படம்
" சூ டா... சூடா... விடிஞ்சிருச்சு பாரு எழுந்திரு..."  பாயில் கிடந்தவன் எப்போது சூடாவின் மடியில் படுத்தான் என்று தெரியவில்லை. தங்கமணியைத் தூக்கி தனியே படுக்க வைத்துவிட்டு சூடாமணியை எழுப்பிவிட்டாள் சிவப்பாக்கியம். "அந்த நாலு நண்டயும் புட்டுப் போட்டு இந்தப் பயலுக்கு ஒரு ரசம் வச்சி குடு. நத்த ஊருது, அதை கொதிக்க வச்சி நோண்டி பெரட்டி குடு. நாட்டுமகாரவங்கள பாத்து சேசனுக்கு போறத பத்தி சொல்லிட்டு வரேன்..." எனக் கிளம்பினாள். ஏ.வி.டி. டீ தூள் பையை வெற்றிலைப் பொட்டலமாக மாற்றியிருந்தார் சிங்காரு. வெற்றிலையை எடுத்து சுண்ணாம்பு தடவிக் கொண்டிருந்தவரிடம், "சேசனுக்கு போயிட்டு வருவோம். ஒங்கூட இன்னும் ரெண்டு நாட்டுமகாரவங்கள அழச்சிக்க" என்று அவரது வெற்றிலைப் பொட்டலத்திலிருந்து சீவலை எடுத்து உள்ளங்கையில் வைத்து நிமிட்டினாள் சிவப்பாக்கியம். "பெரிய நாட்டான்ட்ட ஒரு வார்த்த சொல்லிடு. செகநாதன்ட்ட நான் சொல்லிட்றேன்." எனச் சுண்ணாம்பு குவளையை சிவப்பாக்கியத்திடம் தந்தவர், "காசி கீசி வச்சிருக்கியே... அங்க போனா ஆளுவோளுக்கு டீ கீ வாங்கி தரணும்." என்றார். ...

தெவசம் - 4

படம்
இ லுப்பை மரங்களிலிருந்து வெளவால்களின் சத்தம். செங்கல் கால்வாய் வேலை முடித்து இரவு உணவுக்கு அடுப்பேற்றியிருந்தனர் பணியாட்கள். கோழிகளை கூட்டுக்குள் அடைத்தும் சேவல்களைக் கூடையிலும் கவிழ்த்துக் கொண்டிருந்தார் வடவாத்தங்கரையாரின் அம்மா செல்லபாங்கி. பங்காளி வீடும் இவர் வீடும் இணைந்து சுத்துக்கட்டு வீடாய் இருந்தது. கருப்பஞ் சோகையால் வேயப்பட்ட உயரமான திண்ணையுள்ள வீடு. மண் சுவற்றில் ஆங்காங்கு அடுக்குத் தேனிகளின் கூடு. முன்பக்க மாடத்தில் நல்ல விளக்கு எரிந்துகொண்டிருந்தது. வீட்டுக்குள் விசும்பிக் கொண்டிருந்தாள் வடவாத்தங்கரையாரின் மனைவி வசந்தா. "வாய வச்சிக்கிட்டு சும்மா இல்லாம ஒன்னு கெடக்க ஒன்னு சொல்லப் போயி, அழச்சிட்டு பூட்டாங்க... நான் ஆர போயி புடிப்பேன். எப்படி கொண்டாருவேன்." என்றவள், பிள்ளைகளை மடியில் கிடத்தி தூங்க வைத்துக் கொண்டிருந்தாள். "சோத்துல தண்ணி வூத்துட்டா... திங்கிறீங்களா" எனக் கோழிகளைக் கவிழ்த்துவிட்டு வந்து கணவரைப் பார்த்துக் கேட்டார் செல்லபாங்கி. "இவுனுவோ பாட்டுக்கு செவனேன்னு ஆக்கி எறக்குனத தின்னுக்கிட்டு பொழப்ப பாக்க வேண்டிதான. எதுக்கு இந்த வம்...

தெவசம் - 3

படம்
ஆ ற்றங்கரைக்கு மேல் வடக்கே தொரப்பு - வேலப்பூண்டிக்குச் செல்லும் சாலையும் தெற்கே பல்வாய்கண்டம் - கஞ்சங்கொல்லை செல்லும் சாலையும் வெறிச்சோடியிருந்தது. கிளுவை மரத்தடியில் அரிவாள் துணையில்லாமல் முறைத்து நின்றார் கரும்பாயிரம். மகனைக் கையில் பிடித்துக்கொண்டு கரும்பாயிரம் கோயிலை நோக்கி நடந்தார் வடவாத்தங்கரை ஆள். தோளில் கிடந்த துண்டையெடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு,  "ஐயா சாமி... தாய பழிச்சதில்ல தண்ணிய பழிச்சதில்ல. யாரு வம்பு தும்புக்கும் போனதில்ல... எத்தினி நாளக்கிதான் ஒதப்பட்டு கெடக்குறது. இந்த தடவ வுட்டா மின்ன ஆன மேறி இப்பயும் வூடு வாச இல்லாம நிக்கணும். ராத்திரி தெருவுக்குள்ள பூர்றதுக்கு திட்டம் போட்ருக்கானுவோ மேலத்தெருவானுவோ... ஒருத்தனையாச்சும் புடிச்சி வெட்டுனாதான் கொஞ்சமாச்சும் பயமிருக்கும்னு... என் தம்பிக்காரன் சொன்னான்னுதான் உன் பொருளுல கைய வச்சேன். வெட்டுன பயலுவோ ஓடி ஒளியிற வேகத்துல ஆத்துல போட்டுட்டு பூட்டானுவோன்னு என் பொண்டாட்டிக்காரி சொல்லிதான் தேட வந்தேன். உன் புண்ணியத்துல அது எங் கையில கெடச்சிருந்தா... படி அளக்குற எஞ்சாமின்னு நெடுஞ்சாங்கடையா வுழுந்து ஒப்படச்சிருப்ப...

தலைக் கவிழ்ந்த சிங்கம்

படம்
  அந்தக் காட்டில் நரியும் பன்றியும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். யார் புத்திசாலி என்பதிலும் யார் பெரியவர் என்பதிலும் அடிக்கடி சண்டை வரும். இதைக் கவனித்துக் கொண்டிருந்த சிங்கத்திற்குக் கடுமையான கோபம். “நான்தான் இங்கே எல்லோரை விடவும் பெரியவர்” என நரியையும் பன்றியையும் சிங்கம் சத்தமிட்டு அழைத்தது. நடுங்கிக்கொண்டே இருவரும் சிங்கத்தின் முன் வந்தனர்.  “தேன் நிரம்பிய முழு தேன் அடையை யார் கொண்டு வருகிறீர்களோ… அவர்தான் உங்களில் பெரியவர்.” என்றது சிங்கம். வேக வேகமாக நரி ஓடியது. பன்றி நிதானமாக, ‘நரி தேன் அடையைக் கொண்டு வரட்டும். சிங்கம் தீர்ப்பு சொல்லட்டும். நாம் புத்திசாலித்தனமாகச் சிங்கத்துக்குப் பாடம் புகட்டுவோம். தேன் அடைக்குத் தேன் எப்படி வருகிறது எனக் கண்டுபிடிப்போம்’ என யோசித்துப் புறப்பட்டது.  நரி தேன் நிரம்பிய ஒரு அடையைக் கொண்டு வந்தது. அதைத் தின்று ஏப்பம் விட்ட சிங்கம், “நரி நண்பா… இந்தத் தேனைக் கொண்டு வந்த நீதான் பெரியவர்.” என்றது.  “கொஞ்சம் பொறுங்கள். பல நூறு பூக்களில் இருக்கும் இனிப்பான திரவத்தைச் சிறிது சிறிதாகச் சேகரித்து அவ்வளவு பெரிய கூட்டைக் க...