காட்டுக்குப் போன மிட்டு!
அந்த அழகான ஊரின் தெருவில் நிறைய நாய்கள் வளர்ந்து வந்தன. அதில் மிட்டு என்கிற நாயும் ஒரு பூனையும் நெருங்கிய நண்பர்கள். நாயும் பூனையும் தனியாக விளையாடிக் கொண்டிருந்தன.
அப்போது அங்கு வந்த பன்றி, “நான் காட்டிற்குச் சென்றேன். அங்கு மான், புலி, நரி என நிறைய நண்பர்கள் எனக்குக் கிடைத்தார்கள்.” என்றது.
“அவர்கள் பார்க்க எப்படி இருப்பார்கள். என்னைப் போலச் சண்டை செய்வார்களா?” என்றது நாய்.
“உன்னை விடப் பெரியவர்கள் அங்கு இருப்பவர்கள்” என்று சொல்லி நாயைப் பார்த்து பன்றி சிரித்தது.
நாய்க்கு கோபம் வந்தது. “சரி வா காட்டிற்குப் போகலாம்” என்றது நாய்.
“நான் வரவில்லை. என் மீது அன்பு வைத்து வளர்ப்பவர்களைப் பிரிந்து வரமாட்டேன்” என்றது பூனை.
“நானும் வரமாட்டேன். நான் திங்க முந்திரிப்பழம் வைத்திருப்பார்கள். நான் வீட்டிற்குப் போக வேண்டும்” என்றது பன்றி.
இருவரையும் முறைத்துப் பார்த்தது நாய். காடு இருக்கும் திசை நோக்கி ஓடியது. பன்றியும் பூனையும் நாய் செல்லும் திசையையே பார்த்து நின்றன.
நாய் வழி தெரியாமல் வேகமாக ஓடியது. நீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தது. நாயைத் தேடி பன்றியும் பூனையும் வந்தன. கிணற்றுக்குள் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தன. பன்றி தன் மூக்கால் மண்ணைத் தள்ளியது. பூனை தன் கால்களால் மண்ணைச் சீய்த்தது. நாய் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்தது. பன்றியையும் பூனையையும் நாய் கட்டி அணைத்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக